Friday 19 February 2010

பகல் கொள்ளை



துறையுருக்கு எம்புட்டு

தொண்ணுறு பைசா டிக்கட்டு

ஒத்த ரூபா வாங்கிட்டு

டிக்கட்டு கொடுத்தான்

கண்ட்ரக்ட்டு.

மீதி காசு தருவான்ட்டு

நானும் இருந்தேன்

கம்முன்ட்டு

ஆனா அந்த கண்ட்ரக்ட்டு

வரவே இல்ல இங்குட்டு

கோபம் வந்தது

எகிருட்டு.

கழுத்துல துண்ட போட்டுட்டு

எட்ரா பத்து பைசன்ட்டு

கேட்கலாம்னு இருந்தேன்

நானுன்ட்டு

ஆனா அதுக்கு முந்திட்டு

துறையூர் ச்டபிட் வந்துட்டு

சட்டுன்னு ஏறன்கைய

ஏறங்குன்னு

கத்துனா பாரு கண்ட்ரக்ட்டு

நானும் எறங்குனே

மூடிட்டு!


நான் சிறு வயதில் இருக்கும் போது ஒரு வார இதழில் படித்தது. யார் எழுதியது என்பது கூடஎனக்கு நினைவில் இல்லை. எழுதியது பெரிய எழுத்தாளராக கூட இருக்கலாம் ஆனால் எனக்கு நினைவில் இல்லை மன்னிக்கவும். ஆனால் இந்த கவிதை மட்டும் நினைவில் உள்ளது. உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

விகடன் வார இதழ்
இதல்

No comments:

Post a Comment