Tuesday 1 June 2010

வேட்டைக்காரன்

புது கவிதை என்பதில் பொதுவாக நான், ஊகிக்க முடியாத முடிவுகளை கொண்டதை மிகவும் நேசிப்பவன். அப்படி நீண்ட நாள் கழித்து விகடனில் ஒரு புது கவிதை இந்த வாரம் வெளியாகி உள்ளது. இதோ

வயல்கள்
குளங்கள்
ஏரிகள்
வனங்கள்,
வேட்டையாடிய விலங்கின் மீது
காலுன்றி
புகை படம் எடுத்த வேட்டைகாரனை போல்
காட்சியளிகின்றன கட்டிடங்கள்!

இந்த புது கவிதை என்னை மிகவும் கவர்தது. அது மரங்களின் மீது அதிகம் ப்ரியம் கொண்டதனலோ என்னவோ!
**********

ஆனால் விகடனில் சில நேரங்களில் வெளியாகும் கவிதை எந்தவித திருப்பம் இல்லாமலும் "நண்பர்கள் நான்கு பேர் பீர் குடிக்க அழைத்தார்கள் போய் பார்த்தல் யாரையும் காணம்" என்று இந்த வரிகளை நான்காக பிரித்து எழுதுகிறார்கள். எதுகை மோனைக் கூட வருவதில்லை இன்று வரும் கவிதைகளில். இதற்கு என் நண்பன் கவிதை என்று சொல்லி எங்களிடம் மூன்று வருடம் அல்லல்படும் வாக்கியமே மேல். அது என்னன்னா

மானே! தேனே!
என்று கொஞ்ச வேண்டாம்
போகும் வழியில் என்னை
பார்த்து விட்டு போ!

கவிதையாம்! என்னத்த சொல்ல?


**********



இதேபோல் நாம் சிறிதும் ஊகிக்க முடியாத ஒரு முடிவை கொண்ட ஒரு கவிதை,

தமிழக அரசின்
ரூட் நம்பர் 21 -ல்
அவளை பார்த்தபோது
அவள் உதட்டின் மேல் மெலிதான மீசை!

எழுதியவர் சுஜாதா.