Monday 6 December 2010

சிக்கு புக்கு விமர்சனம்.

வணக்கம்.

நான் பதிவு எழுதி நீண்ட நாள் ஆகிறது. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இப்போது மட்டும் என்ன அவசியம் என்கிர்களா? அவசியம்தான் அமைச்சரே அவசியம் தான். சிக்கு புக்குனு ஒரு படம் பார்த்தேன் அதற்க்கு தான். தமிழ் நாட்டில் மானம் கேட்டவர் பட்டியலில் எனக்கு நிச்சயம் 100 - வது இடமாவது உண்டு.(முதல் இடம் கலைஞருக்கு, அடுத்து 49 இடங்களும் அவரது குடும்பத்திற்கு). ஆகவே நான் இந்த படத்தை காரி துப்புவது தகும்.


சம்பவம் நடந்தது சனி மதியம்.

நான் நண்பர்களுடன் படம் பார்க்க போகலாம் என்று முடிவு எடுத்து கிளம்பினேன். நண்பர்கள் நார்னியா போகலாம் என்றனர். நான் சும்மா இருக்காமல் அலுவலகத்தில் இருக்கும் ஒரு நண்பனிடம், மன்னிக்கவும் நண்பன் என்று பார்க்காமல் பலி கொடுக்க துணிந்த அவன் நிச்சயம் நண்பன் கிடையாது. அவன் ஒரு விஷகிருமி அவனிடம் கருத்து கேட்டேன். அவன்தான் சிக்கு புக்கு போங்க காமடியா இருக்குனு சொன்னனான். அந்த விஷகிருமியின் பேச்சை கேட்டு நண்பர்களை சமாதானபடுத்தி சிக்கு புக்கு போகலாம்னு சம்மதிக்க வச்சேன்.


சரி என்று கோவை செந்தில்,குமரன் தியேட்டருக்கு சென்றோம். காலம் எங்களை காப்பாற்ற முயச்சிதது. டிக்கெட் இல்ல. நான் சும்மா இருக்கமா kg தியேட்டருக்கு போலாம்னு சொன்னேன். அங்கு 85 ரூபா டிக்கெட் எடுத்து உட்கார்ந்தோம். படத்தின் ஒபென்னிங்ல ஒரு சாங் ஒரு ஆண்டி லோ-ஹிப் போட்டுட்டு டான்ஸ் ஆடுச்சு அது கலர் புல்லா தான் போச்சு.


ஆன அதுக்கு அப்பறம் என்ன நடக்குதுனே புரியல. கொஞ்சம் நேரம் கழிச்சு இண்டர்வல் விட்டாங்க. கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. ஒரு பாப்கார்ன் 50 ரூபா (காங்கிரஸ் அரசு நாசமா போக) வாங்கி தின்னுட்டே நண்பன் "நீ ஒரு கூலி படையா செயல்படுற" - னு சொன்னான். ஏன்டானு கேட்டா எங்கள கொல்ல டைரக்டர் கிட்டயும் ப்ரோடிசர் கிட்டயும் இவ்ளோ வாங்குனே- னு கேட்டான். நான் இல்லடா இனி தான் சந்தானம் செம காமடி பண்ணுவான்- னு சொன்னேன். போய் உட்கார்ந்தோம்.


மீண்டும் மொக்கை முடியல. என்ன நடக்குதுனே மறுபடியும் புரியலே. எதுக்கு இடைல ஆர்க்காட்டார் தலையீடு வேற அப்ப முன் சீட்ல இருந்து ஒரு சவுன்ட் "முதன் முதலா இருட்டை ஏத்தி எங்க வாழ்க்கைல வெளிச்சத்த கொண்டு வந்துடீங்க" . தியேட்டர்ல இத மட்டும் தான் ரசிக்க முடிஞ்சது. சந்தானம் நாலு சீனுக்கு வறாரு. அதுலரெண்டு சீன் சிரிக்க வைக்க ட்ரை பண்றார். அவ்ளோ தான்.


படம் முடிஞ்சு வெளியே வந்தா எல்லாரோட முகமும் எளவு விழுந்த வீடு மாதிரி வெறுமையா இருக்கு. நண்பன் ஒரு பொண்ண பாத்து "ஏங்க இந்த படம் உங்களை விட ரொம்ப மொக்கையா இருக்குனு" சொன்னான். கண்கள் பேசும்னு கேள்வி பட்டு இருக்கேன் ஆனா கெட்டவார்த்தை கூட பேசும்னு அப்ப தான் பார்த்தேன். அந்த பொண்ணு பார்வையிலே தெருஞ்சது. "இந்த மாதிரி கதை எழுதறவனே கொல்லனும்டா" இன்னொரு நண்பன். "அப்ப முதல்ல அவர கொல்லுனு கை கட்டினான்" நண்பன். அங்க பார்த்தா கலைஞரின் இளைஞன் போஸ்டர். அப்படியே கலைத்தோம்.


நான் போய் இரவு முழுக்க யோசிச்சு சிதிலம் அடைஞ்ச சீன எல்லாம் ஒட்டி பார்த்தா ஏறத்தாள ஒரு பிட்டு பட கதை வந்துச்சு. இருங்க காரி துப்பிகிறேன். த்துப்பு.....


அதாகபட்டது ஆர்யா போலீஸ் ட்ரய்னிங்ல இருந்து ஊருக்கு வறாரு. அங்க ஒரு பொண்ண லவ் பண்ணுறார். அந்த பொண்ணும் லவ் பண்ணுது. ரெண்டு பெரும் செம ரோமன்ஸ் பண்றாங்க. அந்த பொண்ணு இடுப்ப கிள்ளறது. இடுப்புல முகத்த வச்சு ஓரசறதுன்னு (இந்த சீன் நல்ல இருக்கு) ரோமன்ஸ் போகுது. ஆரியாக்கு போலீஸ் கேம்ப்ல ஒரு பிரெண்டு இருக்கான். அவன் அவங்க அத்த பொண்ண உருகி உருகி லவ் பண்ணுறான். அவன் அத்த பொண்ணு தான் ஆரியாவோட லவர். விஷயம் தெருன்சதும் ஆர்யா விட்டு கொடுத்துடு லண்டன் போய்டறார். அங்க போய் கல்யாணம் பண்ணி, அங்க அவருக்கு இன்னொரு ஆர்யா பிறக்கிறார். இங்க அவரோட பிரண்டும் லவ்வரும் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஒரு கொளந்தை. அது தான் ஷேரேயா. அப்பறம் ஆர்யாவுக்கும் ஷேரேயாவுக்கும் லவ் உருக்கான கிளைமக்ஸ்! நமக்கும் தான்!.